புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யானை குட்டி
புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியின் 6ஆம் கட்டை மீ ஓயா பாலத்திற்கு அருகில் குட்டி யானையொன்று வாகன விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(01.09.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
காயங்களுக்கு உள்ளான யானைக் குட்டி
வீதியில் குறித்த யானைக் குட்டி யானைக்கூட்டத்துடன் நின்றபோதே விபத்து இடம்பெற்றிருக்கலாமென சந்தேகப்பதாகவும் இதனாலேயே யானைக் குட்டியின் பின்கால்கள் இரண்டும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயங்களுக்கு உள்ளான யானைக் குட்டி சுமார் 4 வயது என மதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயங்களுக்கு உள்ளான யானைக் குட்டிக்கு நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் இசுரு ஹேவாகொட்டகேவினால் சிகிச்சையளிக்க உள்ளாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த வீதியில் வாகனங்கள் மற்றும் காட்டு யானைகளினால் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலையில், வாகன சாரதிகளின் கவனக் குறைவினாலே இவ்வாறான விபத்துக்குள் இடம்பெற்று வருவதாகவும் கருவலகஸ்வெவ வனஜிவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
