இலங்கை வந்த வெளிநாட்டவர்களை தாக்கிய யானை
பொலன்னறுவை - ஹபரணை வீதியில் மின்னேரியாவை அண்மித்த காட்டுப்பகுதியில் சிறு குழந்தை உட்பட 4 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்த கார் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.
நேற்று காலை 11 மணியளவில் காட்டு யானையொன்று வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 மாத குழந்தை, 8 வயது சிறுவன் மற்றும் 33 மற்றும் 36 வயதுடைய தம்பதியர் வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்கள் ரஷ்ய சுற்றுலா பயணிகள் குழு என தெரியவந்துள்ளது.
காரில் ஹபரணை நோக்கி பயணித்த போது காட்டு யானையொன்றை கண்டு வாகனத்தை நிறுத்தி யானையை படம் எடுக்க முற்பட்டுள்ளனர்.
காட்டு யானை காருக்கு அருகில் வந்து தள்ளியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காட்டு யானையின் தாக்குதலால் காரின் பின்பக்க கதவு கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்துள்ளன. வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கார் மாத்தறை பகுதியை சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினரிடம் வாடகை அடிப்படையில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கார் மற்றும் வெளிநாட்டவர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
