மயிலிட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடுதி முடக்கப்பட்டது.
மேலும் அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் பகுதிக்கு மாற்றப்பட்டதுடன், அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களில் 5 பேர் முல்லேரியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவரான மயிலிட்டியை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார பிரிவினரின் கண்காணிப்புடன் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டும் முல்லேரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
முல்லேரியாவில் சுகாதார நடைமுறைகளுடன் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam