ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நிலைப்பாடு: மொட்டு தரப்பு விளக்கம்
ரணில் விக்ரமசிங்க எப்போதும் ஜனநாயகம் பற்றி பேசுபவர் என்ற வகையில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்க மாட்டார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும், கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் முடிவு
''தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் முடிவுகளை எமது கட்சி எடுப்பதில்லை. கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்க அல்லது வேறு யாராக இருந்தாலும் கொள்கையின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும்.
எங்கள் கட்சி வெற்றிபெறும் என்று நாங்கள் நம்புகிறோம். கட்சியின் அடையாளத்தை பாதுகாப்பவர் வெற்றிபெற தேவையில்லை.
கட்சி என்ற முறையில் எமது உறுப்பினர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |