புதிய அவதாரம் எடுக்கும் மகேஷ் சேனாநாயக்க - சவேந்திர சில்வா! ஆபத்தாகும் இந்தியாவின் எதிர்காலம் (Video)
ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற உடன் பாதுகாப்புத்துறையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், அவருக்கு விருப்பமான மென்மையான போக்குக்கொண்ட முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மிக விரைவில் பாதுகாப்புத்துறைக்கு நியமிக்கப்படலாம் என இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரை கைது செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
மியன்மார் போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிகளை இராணுவ மாற்றங்களையெல்லாம் கொண்டு வந்த முக்கியமான அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் நாடடிக்குள் வந்து போனார்.
கோட்டையர்களுக்கு எதிராக வெளியிலும் நாடாளுமன்றத்திலும் முதலில் குரல் கொடுத்த விமல் வீரவன்சவை தான் அந்த இராணுவ அதிகாரி முதலில் சந்தித்தார்.
இதேவேளை மிக நெருக்கமான முறையில் இராணுவ தளபதிகளை சந்தித்துள்ளார். அப்போதே இவர்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டார்கள்.
இந்நிலையில் இலங்கையின் அரச புலனாய்வு படையினர் கோட்டையினருக்கு தகவல் கொடுத்தார்கள்.
அமெரிக்காவின் முன்னாள் தளபதி ஒருவர் நாட்டின் முக்கியமான தலைவர்களை சந்திப்பதாகவும் உடனே அவரை கைது செய்யுமாறு உத்தரவு விடுத்தும் அவரை கைது செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது என கூறியுள்ளார்.