பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிய பெண் ஒருவர் மரணம்! வெளியான தகவல்
பிரித்தானியாவில் கோவிட் தடுப்பூசியால் மூளை இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதுடைய ஆசிய பெண் Oxford/AstraZeneca தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். தடுப்பூசி செலுத்திய 6 நாட்களுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதன்போது,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரத்தக்கசிவு காரணமாக அப்பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Oxford/AstraZeneca தடுப்பூசியால் அப்பெண்ணின் மூளை இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், பக்கவாதத்தால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிய பெண்ணின் மரணம் குறித்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவர்கள் குழு அறிக்கையொன்றினை அளித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்திய பின்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய 37 வயது பெண் மற்றும் 43 வயது ஆண் குறித்து மருத்துவர்கள் குழு அறிக்கையொன்றினையும் சமர்பித்துள்ளது.
இதன்படி,தடுப்பூசியால் இரத்த குழாயில் இரத்த உறைதல் ஏற்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.