ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லத்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவொன்று தாக்குதல்
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (14) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய மூவர் பிலியந்தலையில் உள்ள சமுதிதாவின் வீட்டில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு அதிகாரியை நோக்கி துப்பாக்கியை காட்டி வீட்டுக்குள் நுழைய முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பின்னர் வீட்டின் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிவாயு கலவை பிரச்சினை, வெள்ளைப்பூண்டு மோசடி உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை சமுதித்த தனது நிகழ்ச்சிகளில் அம்பலப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.