கொழும்புக்கு வந்து சென்ற அமெரிக்க ஆய்வுக்கப்பல்
இலங்கைக் கடலில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ள முயன்றவேளை, தமது நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியா, இலங்கைக்கு தமது ஆட்சேபனைகளை வெளியிட்டு வந்தது.
பாதுகாப்பு அமைச்சின் தகவல்
இதனையடுத்து குறிப்பிட்ட காலத்துக்கு சர்வதேச ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை தடையை விதித்தது.
இதற்கமைய அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலுக்கும் இலங்கை தடையை நீடித்திருந்தது.
எனினும் குறித்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்தக் கப்பல் ஏப்ரல் 19ஆம் திகதி இலங்கைக்கு வந்து ஏப்ரல் 22ஆம் திகதி புறப்பட்டு சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |