SpaceX உடனான உலகின் 7ஆவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஒப்பந்தம்
மெக்சிகன் தொலைத்தொடர்பு நிறுவனமான அமெரிக்க மோவில் (AMXB.MX), எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக அந்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க மோவில் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மோவில், எஸ்.ஏ.பி. டி சி.வி என்பது, மெக்சிகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மெக்சிகன் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும்.
புதிய ஒப்பந்தம்
சமபங்கு சந்தாதாரர்களின் அடிப்படையில் இது உலகின் 7ஆவது பெரிய மொபைல் நெட்வொர்க் இயக்குனர் நிறுவனமாக உள்ளதுடன் அதே போல் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றும் ஆகும்.
மூன்றாம் காலாண்டிற்கான வருவாய் முடிவுகளை வழங்குவதற்கான செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்க மோவில் நிர்வாகிகள், குறித்த ஒப்பந்தம் மூலம் SpaceXஐ அதன் முக்கிய மொபைல் சேவை நெட்வொர்க்குடன் இணைக்க வழிவகுக்கும் என விளக்கியுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோள் இணையப் பிரிவான ஸ்டார்லிங்க் உடன் தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கனவே சேவை ஒப்பந்தம் ஒன்றினை கொண்டுள்ளது.
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்திற்கான முக்கியத்துவத்தின் கீழ் இந்த புதிய இணைப்பு ஒப்பந்தம் இருக்கும் என அதன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |