சற்றுமுன்னர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
02.09.2026 ஆம் திகதி ஏற்பட்ட சர்ச்சை..
அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார் என்ற செய்தி (02.09.2026) எமது தளத்தில் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த திகதியில் மட்டக்களப்பு பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவும், கைது செய்யவும் தயக்கம் காட்டிய நிலையில் எமது தளத்தில் செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில் எமது தளத்தில் வெளியான குறித்த காணொளியை அடிப்படையாக வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.