அம்பாறை - அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த சந்தேகநபர்கள் கைது (photo)
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அக்கரைப்பற்று பதில் நீதவான் கே.சமீம் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
அம்பாறை - அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து நேற்று (29.12.2022) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோளாவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதி தீக்கிரயம்
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பபற்று நீதவான் நீதிமன்றில் நேற்று (29.12.2022) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ வைக்கப்பட்டமையால், நீதிமன்ற ஆவணப்பகுதி முற்றாக நாசமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
