அம்பாறை - பொத்துவில் பிரதேச மக்களின் நிலங்களில் வேறு குடியேற்றங்கள் அமைக்கும் முயற்சி - ஈரோஸ் கட்சி குற்றச்சாட்டு (Photos)
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகர் கிராம மக்களை வைத்து தமது அரசியல் சுயலாபங்களுக்காக செயற்படுவோர் தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள் கடுமையான நடவடிக்கையெடுப்பார்கள் என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா குறிப்பிட்டார்.
நேற்று (20.09.2023) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கனகர் கிராம மக்களின் நிலங்களில் வேறு குடியேற்றங்களை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார்.
மிரட்டல் நடவடிக்கை
தமது காணிகளில் இருந்து வெளியேறுமாறு கூறுவதுடன் அதற்கு எதிராக கதைக்கும் போது உங்களை கைது செய்வேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர்.
மேலும், 1990ஆம் ஆண்டு தாங்கள் அப்பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளை தருவதற்கு பொத்துவில் பிரதேச செயலாளர் மறுப்பு தெரிவிப்பதுடன் அப்பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழ்ந்த நிலையிலும் தற்போது முஸ்லிம்களையும் இணைத்து குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
