பெற்றோருடன் வெளியில் சென்ற 2 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
அம்பாறை (Amparai) பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் குழந்தையொன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு (06.04.2024) இடம்பெற்ற இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 02 வயது 07 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.

பொலிஸார் விசாரணை
ஆலயமொன்றில் குழந்தையுடன் பெற்றோர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி வீதிக்கு வந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 22 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam