இலங்கையை எச்சரித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை-செய்திகளின் தொகுப்பு
போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதை இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் காலப்பகுதியில், இலங்கை அதிகாரிகள் போராட்டங்களை கடுமையாக கட்டுப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நெருக்கடிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக மன்னிப்புச் சபையின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான போராட்டக்காரர்களை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதுடன், அவர்கள் மீது அதிகாரத்தை பிரயோகித்ததாகவும் இராணுவத்தை பயன்படுத்தியதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்தும் உரிமை மக்களுக்கு உள்ளதாகவும் அத்தகைய உரிமைகளை எளிதாக்கும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan