இலங்கைக்கு தொடரும் நெருக்கடி - ஐநா விடம் சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள கோரிக்கை
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலுப்படுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய நெருக்கடியின் மையத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கும் இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் மன்னிப்பு சபை கோரியுள்ளது.
இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் தண்டனையின்மை என்பது சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், நிலையான அபிவிருத்தி என்பவற்றுக்கு மையத் தடையாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையை இழப்பு
யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்த போதும், ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பயனுள்ள நிலைமாறுகால நீதி செயல்முறையைத் தொடரத் தவறி வருகின்றன.
போர்க் குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களுக்கு அரசாங்க பதவிகள் மற்றும் வெகுமதிகளை வழங்கியது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் அலுவலகம் போன்ற உள்நாட்டு நிலைமாற்று நீதி அமைப்புகள் இழப்பீடுகள் - பெரும்பாலும் பொருத்தமற்றதாகிவிட்டன.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் மிகவும் முக்கியமானது.
உறுப்பு நாடுகளிடம் மன்னிப்பு சபை விடுத்துள்ள கோரிக்கை
இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை பலப்படுத்துவதற்காக, இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உறுப்பு நாடுகளை மன்னிப்பு சபை கோரியுள்ளது.
அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து, அதன் பயன்பாட்டிற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை உடனடியாக
ஏற்றுக்கொண்டு அதை முழுமையாக செயல்படுத்தவேண்டும் என்பதை இலங்கையிடம்
வலியுறுத்தவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புசபை கோரியுள்ளது.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
