ரஞ்சனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்! - கோட்டாபயவிடம் சஜித் கோரிக்கை
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியைத் தொலைபேசி வழியாக நேற்று தொடர்புகொண்ட சஜித், மனித நேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்குமாறும் கோரியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்ற சஜித், ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து சுகநலம் விசாரித்துள்ளார். ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிட்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல ரஞ்சனின் விடுதலைக்காக சர்வதேசம் செல்லக் கூட தயாராகவே
இருக்கின்றோம் எனவும் சஜித் அறிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் சுதந்திர தினத்தில் ரஞ்சன் விடுவிக்கப்படலாம் எனத்
தகவல்கள் வெளியாகியுள்ளன.





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
