தமிழ்க்கட்சிகள் இன்று நாற்பதாக சிதறுண்டுள்ளது : ஈ.பி.டி.பி வேட்பாளர் ஆதங்கம்
மூடையாகக் கட்டி வைத்து விட்டு அவிழ்ந்து சிதறிய தேசிக்காய் மூடை போல் இப்பொழுது தமிழ் கட்சிகள் சிதறுண்டு 40க்கும் மேற்பட்ட கட்சிகளாக உருவாகி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பகுதிகளில் ஈ.பி.டி்.பி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வு நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தொடர்ந்து உரையாற்றுகையில், “இன்றைய தேர்தல் களத்திலே 40க்கும் மேற்பட்ட கட்சிகள் களமிறங்கி இருக்கின்றது இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மாத்திரம் சிதைவடையாமல் ஒரே கட்சியாக போட்டியிடுகின்றது
வடக்கு கிழக்கில் ஏனைய ஐந்து தேசிய கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற இவர்களே இந்த சுயேட்சை குழுக்களாகவும் புதிய புதிய அணிகளாகவும் களமிறங்கி இருக்கின்றார்கள்
அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று உருவாகிய கட்சிகளே இன்று களமிறங்கி இருக்கின்றன.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆனது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை கடந்த அரசாங்கங்களுடன் இணைந்து முன்னெடுத்திருக்கின்றது
முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலை
இவற்றிற்கு கட்சியிலே இருந்து பிரிந்து சென்ற ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த வேலைகளை தான் செய்ததாக உரிமை கோரி வருகின்றார்.
அவர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியாக கட்சியை உருவாக்கி அதனைக் கூட கட்டிக்க காக்க முடியாமல் இப்பொழுது வேறொரு கட்சியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளதுடன் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளை தன்னுடைய வேலையாக காட்டுவதற்கான மாயை உருவாக்கி இருக்கின்றார்.
ஆகவே இதை மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |