ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இருபுறமும் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரான் உடனான அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தற்போது 19 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளதுடன், நீரிணையின் இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரானுக்கு எச்சரிக்கை
இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வீசப்பட்டு உள்ள கண்ணிவெடிகளை படிப்படியாக அகற்றி வருகிறோம்.
மேலும் கண்ணிவெடிகளை வீசும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் உயர் தலைவர் மோஜ் தபா கொமெய்னி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் தேசப்பற்றாளர்களின் ஒற்றுமையால் எதிரிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்கிறது.இதற்கு இடம் கொடுக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை
இந்த பின்னணியில், ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிக் குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று (24) இரவு அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஜராட் குஷ்னர் ஆகியோர் இன்று பாகிஸ்தான் சென்று ஈரானிய அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய பாகிஸ்தான், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam