அமெரிக்க உளவாளி சீனாவில் கைது: பெய்ஜிங் வெளியுறவு அமைச்சகம் உறுதி
மியான்மரின் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மின் ஜின் என்பவர், “உளவு பார்த்தல்” மற்றும் “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தல்” போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் மியான்மர் ஆகிய இரு நாட்டு குடியுரிமைகளையும் கொண்ட இந்த ஆய்வாளர், சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்த கைதை சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா அரசியல் ஆய்வாளர் சீனாவில் கைது
மியான்மரின் மூலோபாய மற்றும் கொள்கை நிறுவனத்தின் நிறுவனரான மின் ஜின், மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் குன்மிங் நகரில் கடந்த ஜூன் 3 அன்று காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

மியான்மரின் தற்போதைய அரசியல் மற்றும் உள்நாட்டு மோதல்கள் குறித்து நடுநிலையான விமர்சனங்களை எழுதி வந்த இவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த கைது விவகாரம் குறித்து சீனாவுக்கான அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கைதானவருக்கு தேவையான தூதரக உதவிகளை வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri