குடியுரிமைக்காக மட்டுமல்ல சுற்றுலா பயணியாக கூட கோட்டாபய அமெரிக்க வர முடியாது! தயா கமகே அதிரடி தகவல்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician United States of America Sri Lankan political crisis
By Debora Sep 13, 2022 10:16 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு குடியுரிமைக்காக மட்டுமல்ல சுற்றுலா பயணமாக கூட வருகை தர அனுமதி வழங்கப்படமாட்டாது என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முன்னாள் அரசியல் நிபுணர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவிற்கு குடியுரிமை வழங்க முடியாது

“ கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தனது குடியுரிமையை ரத்து செய்து கொண்டார்.

தற்போது குடியுரிமை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கின்றார். அமெரிக்காவில் குடியுரிமை வழங்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் சில விடயங்களை தேடி பார்க்கும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

குடியுரிமைக்காக மட்டுமல்ல சுற்றுலா பயணியாக கூட கோட்டாபய அமெரிக்க வர முடியாது!  தயா கமகே அதிரடி தகவல் | American Government About Gotabaya Rajapaksa

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற முற்படும் சந்தர்ப்பத்தில் அமெரிக்காவிற்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டாம் என அவரை அறிவுறுத்தும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதியின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க துதரகம் ஊடகங்களுக்கு அறிவித்தது.

காரணம் ஒருவரின் விசா ரத்து செய்யப்படல் பொதுவாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.

ரணில் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஆதரவு

மேலும் ராஜபக்ச ஆட்சியா அல்லது ரணில் விக்ரமசிங்க ஆட்சியா என்பது அமெரிக்காவிற்கு தேவையில்லை. அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சில வரையறைகள் காணப்படுகின்றன. அதற்கமைவாக செயற்படுவர்களுடன் அமெரிக்கா இணைந்து செயற்படும்.

அவ்வாறு பார்க்கும் போது ராஜபக்ச ஆட்சியை பார்க்கிலும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியையே அமெரிக்கா விரும்புகின்றது" என தெரிவித்துள்ளார்.    

தயா கமகே

தயா கமகே என்பவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் வெளிவிவகார கொள்கை தொடர்பான அதிகாரியாக கடமையாற்றியவர் ஆவார்.

குடியுரிமைக்காக மட்டுமல்ல சுற்றுலா பயணியாக கூட கோட்டாபய அமெரிக்க வர முடியாது!  தயா கமகே அதிரடி தகவல் | American Government About Gotabaya Rajapaksa

1970 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வெளிவிவகாரம் தொடர்பான அரசியல் ஆய்வாளராகவும் ஊடக ஆலோசகராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பிரதேசத்தில் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US