விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த அமெரிக்கர் கைது
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில், கடவுச்சீட்டில் சிங்களப் பெயரினைக் கொண்ட அமெரிக்கப் பிரஜை ஒருவரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த அமெரிக்கப் பிரஜை கடந்த 16 மாதங்களாகவே விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்துள்ளார்.
கண்டி தலைமைப் பொலிஸ் காரியாலயத்தின் சுற்றுலாப் பிரிவு அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
சிங்களப் பெயர்
குறித்த அமெரிக்கப் பிரஜை கண்டியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, கைதான நபரின் விசா காலம் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் கடவுச்சீட்டில் ஆரியரட்ன சஞ்சீவ சேனக்க ஆரியரட்ன என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த நபர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த மடிக்கணினி அடிக்கடி பயன்படுத்தி வந்தார் என ஹோட்டல் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri