நடைபாதை வியாபாரிகள் கைது தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகள் கைது செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரிகள் கைது செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிழையான செய்திகள்
தற்போதைய அரசாங்கம் ஜனவரி 1ஆம் திகதி ஆரம்பித்த கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பில் பல்வேறு பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வீதிகளின் இரு மருங்கிலும் வியாபாரத்தில் ஈடுபடுவோர் இவ்வாறு கைது செய்யப்படுவதாக சில பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும், இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் எவரையும் கைது செய்யவோ சட்ட நடவடிக்கை எடுக்கவோ அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri