காசாவிற்கான அமெரிக்காவின் அமைதி திட்ட முன்மொழிவுகள்!
காசாவிற்கான அமெரிக்காவின் அமைதி திட்டத்தின்படி, 60 நாள் போர் நிறுத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதனை தவிர முதல் வாரத்தில் 28 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உயிருடன் அல்லது இறந்த நிலையில், ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.
60 நாள் போர் நிறுத்தம்
அதற்கு ஈடாக 1,236 பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் 180 இறந்த பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என்றும் அந்த திட்டத்தில் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் எகிப்து மற்றும் கத்தார் தரப்பினரால், இந்தத் திட்டத்துக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதும் அமெரிக்க முன்மொழிவில் உள்ளடங்கியுள்ளது.
உதவி
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் மற்றும் பிற ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்புக்கள் மூலம் உதவி வழங்கப்படும் என்றும் அந்த முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதேநேரம், புதிய திட்டத்தை முழுமையாகவும் பொறுப்புடனும் மதிப்பாய்வு செய்து வருவதாக ஹமாஸ் தலைமை தெரிவித்துள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri