காசா போர் நிறுத்தம்! முக்கிய உடன்பாட்டுக்கு இணங்கிய ஹமாஸ் அமைப்பு
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்புதல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியை ஏற்படுத்தும் என பாலஸ்தீன அமைப்பக்கள் தெரிவித்துள்ளன.
பத்து பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் 70 நாட்கள் போர் நிறுத்தம் ஆகியவற்றைக் கொண்ட புதிய திட்டம், மத்தியஸ்தர்கள் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
70 நாள் போர் நிறுத்தம்
70 நாள் போர் நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து பகுதியளவு படைகள் திரும்பப் பெறுவதற்கு ஈடாக, ஹமாஸால் இரண்டு குழுக்களாகப் பிடிக்கப்பட்ட பத்து உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது இந்த திட்டத்தில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு இஸ்ரேலால் பல பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதையும் கொண்டமைந்துள்ளது.
எனினும் இஸ்ரேலிடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
