அமெரிக்காவின் மிக முக்கிய தாக்குதல் திட்டம்! வெளியே கசிந்தது எப்படி...
அமெரிக்காவில் மிக முக்கிய தாக்குதல் திட்டம் தொடர்பான தகவலானது முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள சிக்னல் செயலியில், உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, சிஐஏ இயக்குநர் ஜோன் ரட்ச்லிப்பே, உளவுத்துறை இயக்குநர் துளசி கேபார்டு உள்ளிட்ட வெகு சிலர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தாக்குதல் தொடர்பான தகவல்
இந்த குழுவில் இணைய, அட்லாண்டிக் என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்-கிற்கு, வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்-சிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கோல்ட்பெர்க் குழுவில் இணைந்துள்ளார்.
அக்குழுவில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவல் பகிரப்பட்டுள்ளது.
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா கடந்த 15 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பான தகவல் தனக்கு 2 மணி நேரங்களுக்கு முன்பே தெரியும் என கிளப்பியுள்ளார் கோல்ட்பெர்க் கூரியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
