பயணிகளுக்காக எல்லைகளை மீண்டும் திறப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
2021, நவம்பர் 8 முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக அமெரிக்கா தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகளின் படி, பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் எதிர்மறை சோதனை அறிக்கையைக் கொண்ட தடுப்பூசி போடப்பட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகள் மீது விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளின் முடிவைக் குறிக்கிறது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பிலிருந்து அவசர பயன்பாட்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் இந்த அமைப்பின் கீழ் தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்படுள்ளது.
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam