விவேக் ராமசாமிக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு இல்லை! மனைவி அபூர்வா வெளியிட்டுள்ள பதில்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை என்று விவேக் ராமசாமியின் மனைவி அபூர்வா ராமசாமி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வாக்காளர்களின் ஆதரவு
இவ்வாறான நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் போட்டியிடும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமிக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என அவரது மனைவி அபூர்வா ராமசாமி கூறியுள்ளார்.
விவேக் மீது பல பெண்கள் திமிர்பிடித்ததாகக் கருதப்பட்டதாக எழுந்த புகாருக்கு பதிலளித்த அபூர்வா, சிலர் வேண்டுமென்றே தனது கணவரைத் தாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், தனது கணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததாகவும், குடியரசுக் கட்சியின் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களின் விவாதத்தில் ஆர்வத்தைத் தூண்டியதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
