அமெரிக்காவுக்கு எதிராக போரில் களமிறங்கவுள்ள 8 இலட்சம் பேர்! வடகொரிய அரசு அறிவிப்பு
அமெரிக்காவுக்கு எதிராக போர் புரிய எட்டு இலட்சம் பேர் இராணுவத்தில் இணைய ஆர்வமாக உள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்கள் மூலம் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகின்றது.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
மேலும், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
வடகொரியாவின் 'ரோடங் சின்முன்' என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவுக்கு எதிராக போரிட எட்டு இலட்சம் மக்கள் வடகொரிய இராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வடகொரியா 'வாசாங்போ-17' என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
