அமெரிக்காவில் கோர விபத்து : சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்
அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் (New Orleans) புத்தாண்டு தினத்தன்று மக்கள் கூட்டத்தில் கார் புகுந்து மோதியதில் குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கோர விபத்தில் 30 பேர் வரை காயமடைந்துள்ளதோடு, விபத்து ஏற்படுத்திய SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஓர்லியன்ஸில் உள்ள போர்பன் வீதி மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.
சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் அதிவேகமாக மக்கள் மீது மோதியது.
🔴 ABŞ-da avtomobil insan izdihamının üzərinə sürülüb, 10 nəfər ölüb, 30 nəfər yaralanıb pic.twitter.com/B6a7enhIPb
— APA İnformasiya Agentliyi (@APA_agentliyi) January 1, 2025
இதைத் தொடர்ந்து, சாரதி ஒருவர் வாகனத்தை விட்டு வெளியேறி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்டுள்ளதுடன், குற்றவாளி குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஓர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும்.
மேலும், போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
