அமெரிக்காவின் முன்னாள் தலைமைச்சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்

death america ramsy clark tgte
By Independent Writer Apr 15, 2021 07:35 PM GMT
Independent Writer

Independent Writer

in அமெரிக்கா
Report

அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினருமாகிய ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய ராம்சி கிளர்க்கின் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை 'வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு' என்று அமெரிக்க அரசு அறிவித்த போது, சட்டத்தரணி என்ற முறையில் ராம்சி கிளர்க் அவர்கள், அதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் சார்பில் வழக்காடியிருந்தவர்.

அன்னாரின் இழப்பு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதியும், சுதந்திர அரசியல் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை நிறுவிக் கொள்வதற்குமான ஈழத்தமிழர் போராட்டத்தின் அயரா ஆதரவாளரான விளங்கிய அமரர் ராம்சி கிளர்க், ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய கூட்டாளியாகத் திகழ்ந்தார் எனத் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொலம்பியா மாநில அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 'தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாட்டு அமைப்பு அல்லவென்றும், அது ஒரு மெய்ந்நிலை அரசாங்கம் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் பன்னாட்டுச் சட்டக் கொள்கைகளின் படி நடப்பது' என்றும் தனது வாதுரையின் போது குரல் கொடுத்திருந்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும், ஈழத்தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் ஆகும் என அமரர் கிளர்க் உறுதியாக நம்பினார்.

பொதுவெளிகளிலோ அல்லது சக சட்டத்தரணிகளுடனும் கல்வியாளர்களுடனும் தனிப்பட்ட உரையாடல்களிலோ இதைச் சொல்ல அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சட்ட அறிவுரையினை அமரர் கிளர்க் அவர்கள் வழங்கி வந்தார்.

இறுதிப் போரின் போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாவதற்கு எதிராகக் கிளர்க் குரல் கொடுத்தார். அமெரிக்காவில் தமிழர்கள் ஒழுங்கு செய்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். குறிப்பாக நியுயோர்க்கில் 5 ஈழத் தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தவர்.

2009ம் ஆண்டு பெரும் இன அழிப்பு போரின் மூலம் தமிழர் தேசம் ஆக்கிரமிப்பு உள்ளான பின்னர், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெறத் துணையாக விளங்கிய வளப்பெருமக்களில் அமரர் கிளர்க் அவர்களும் ஒருவர் ஆவார்.

2010ம் ஆண்டு நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவைத் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியுயோர்க் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார். தேர்தல் ஆணையர் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினார் என்பதற்குச் சான்றாக, வாக்குப்பெட்டிகள் தனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமரர் வலியுறுத்தினார் என ராம்சி கிளார்க்கை நினைவுகூரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய நேர்மை கொண்டு தமது கடமையை அணுகியதன் வாயிலாக அவர் தமது சீரிய பண்பைக் காட்டியது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் பால் பெருமதிப்பையும், பன்னாட்டுலகின் செயலின்மைக்கு நடுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேவை பற்றிய ஆழ்ந்த புரிதலையும் வெளிப்படுத்தினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்காவின் அரசமைப்புக் கூடத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை அமர்வில் கலந்து கொண்டதோடு, கடந்த பத்தாண்டுக் காலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார். 'ராம்சி உயர்ந்த கொள்கைப் பற்றுறுதியும் பெருந்தன்மையும் மிக்கவர். எமது இலட்சியத்தில் முழுமனதாக நம்பிக்கை கொண்டிருந்தவர்.

எமது முதல் கூட்டத்தில் எம்மோடிருக்க வேண்டி நியுயோர்க்கிலிருந்து பிலடெல்பியாவுக்குத் தொடருந்தில் வந்தவர் என்பது மட்டுமல்லாது, பயணக் கட்டணத்தை நாம் கொடுக்க முன்வந்த போதும் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்' என மேலும் ராம்சி பற்றிய நினைவுகளைப் பிரதமர் உருத்திரகுமாரன் நினைவு கூர்ந்தார். 2013ம் ஆண்டு தமிழீழ சுதந்தர சாசனம் முரசறையப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை மே 18 - தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், 'முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவு' நிகழ்வின் முதலுரையினை அமரர் ராம்சி கிளார்க் அவர்கள் 2015ம் ஆண்டு வழங்கினார் எனச் சமகாலத்தில் கருத்துருவாக்கம் பெற்றுள்ள 'இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்' என்ற நிலைப்பாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த 'மில்லியன் கையெழுத்து போராட்டத்தின்' முதல் கையெழுத்தினை அமரர் அவர்களே இட்டார் என்பது வரலாற்றுப் பதிவாகவுள்ளது.

முதல் மூன்று மாதக் காலத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கையொப்பங்களை இவ்வியக்கம் திரட்டியிருந்தது. இதேவேளை கருத்துரையினையும், அரசியல் வெளிப்பாட்டு உரிமையினையும் பறிக்கின்ற இலங்கையின் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தை எதிர்த்து ஐ.நா மனித உரிமைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் அமரர் கிளர்க்கும் ஒருவர் ஆவார்.

'கடந்த 25 ஆண்டுக் காலம் ராம்சியுடன் பழகவும், சேர்ந்து உழைக்கவுமாக நான் பெரும்பேறு பெற்றேன், எனக்குத் தோழராக மட்டுமின்றி எனக்குத் தந்தைபோலவும் விளங்கினார் எனக் குறிப்பிடும் பிரதமர் வி.உருத்திரகுமாரன், நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது விடுதலைப் போராட்டத்துக்கு அவரது நினைவு என்பது, ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US