ஈரானின் 84 துல்லியத் தாக்குதல்கள் : வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளைச் சிதைத்த வியூகம்
2026, பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகளில் குறைந்தபட்சம் 84 உட்கட்டமைப்பு தளங்கள் மீது 135இற்கும் மேற்பட்ட துல்லியமான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை தவிர்க்கப் பயன்படுத்தப்பட்ட, ஐக்கிய அமீரகத்தின் புஜைரா (Fujairah) எண்ணெய் துறைமுகம் குறைந்தது 19 முறை தாக்கப்பட்டது.
தாக்குதல்கள்
அங்குள்ள எண்ணெய் தொட்டிகள் மற்றும் குழாய் இணைப்பு அமைப்புகள் சேதமடைந்ததால் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அபுதாபியில் உள்ள பரகா அணுமின் நிலையம் மற்றும் அலுமினிய உருக்காலை ஆகியவையும் தாக்கப்பட்டு உற்பத்தியில் முடக்கம் ஏற்பட்டன.
இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய மசாகு எண்ணெய் விலையை பீப்பாய்க்கு 120 டொலருக்கும் அதிகமாக உயர்த்தின.
வளைகுடா அரசுகள் தகவல் கசிவைத் தவிர்க்கவும், பொதுமக்களிடையே பீதியைத் தவிர்க்கவும் சேதங்களை மறைத்து, வான்வழித் தற்காப்பு அமைப்புகளின் 'சிதறல்களால்' மட்டுமே சேதம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடை மற்றும் இராணுவ அழுத்தங்களை எதிர்கொண்டு, வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளைத் துல்லியமாகத் தாக்குவதன் மூலம் இரான் தனது பிராந்திய பலத்தையும், அமைச்சுப் பேச்சுவார்த்தைகளுக்கான பேரம் பேசும் சக்தியையும் தக்கவைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.