ஈழத்தமிழர்களை அமெரிக்கா அழைக்கவில்லை! டக்ளஸ் தேவானந்தாவும் கனடா வரலாம் (VIDEO)
ஈழத்தமிழர்களை பேச்சு வார்த்தைக்கு இதுவரை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை எனவும்,அங்கிருக்கும் அமைப்பு ஒன்றே அழைப்பு விடுத்துள்ளதாகவும் கனேடிய தமிழர் தேசிய அவையின் ஊடக பேச்சாளர் தேவசபாபதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
நெருக்கடிக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களை நோக்கி இலங்கை வந்து தமது முதலீடுகளை வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தான் நடுநிலையான நிலையில் அங்கம் வகிப்பதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு 14 நாடுகளை சேர்ந்த ஈழத்தமிழர் மக்களவை வெளிப்படையாக தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வும் கிடைக்காத விடத்து எந்தவிதமான முதலீடுகளோ பேச்சு வார்த்தைகளோ சிங்கள பேரினவாத அரசுடன் இடம்பெறாது என தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



