அமெரிக்காவில் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்: 14 வயது மாணவன் பலி
அமெரிக்காவின் டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலை பாடசாலையில் கல்வி கற்றுவந்த மாணவன் தடகள விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த நாக்ஸ் மேக்ஈவன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டு பயிற்சி
இதன்படி, குறித்த மாணவன் 5 கிலோ மீற்றர் தடகள விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசர சிகிச்சை குழுவினர் உடனடியாக சென்றிருந்தும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சியின்போது, காலிப் ஒயிட் (வயது 17) என்ற மாணவர் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
