பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையாக்கப்படும் சட்டங்கள்
வார்த்தைகள் மூலமாகவோ அல்லது ஏதேனும் தகவல்தொடர்பு மூலமாகவோ பாலியல் துன்புறுத்தலை ஏற்படுத்துவது, நாட்டின் குற்றவியல் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
விரைவில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள திருத்தங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்குவதற்கு குற்றவாளியும் பொறுப்பாவார்.
குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ், பாலியல் துன்புறுத்தலுக்கு சமமான தகவல் தொடர்பு என்பது, மின்னணு வழிமுறைகள் அல்லது இணையம் மூலம் வெளிப்படையான பாலியல் செய்திகள், கருத்துகள், படங்கள், குரல் அல்லது காணொளியை அனுப்புதல், விநியோகித்தல், பகிர்தல், உருவாக்குதல், பரப்புதல் அல்லது வெளியிடுதல் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வார்த்தைகள் அல்லது செயல்களின் பயன்பாட்டில் ஏதேனும் ஒலி அல்லது சைகை செய்தல், எந்தப் பொருளையும் காட்சிப்படுத்துதல், பாலியல் வண்ணக் கருத்துகளைச் செய்தல் மற்றும் பாலியல் விருப்பங்களைக் கோருதல் ஆகியவையும் குற்றங்களில் அடங்கும். பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |