தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள் - பிளவடையும் அரசியல் கட்சிகள்
எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 உறுப்பினர்கள் தங்களது அரசியல் கட்சியை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் கிட்டத்தட்ட 15 பேர் முக்கிய கட்சிகளில் பதவி வகிப்பதாக தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு குழுவினரும் தீர்மானித்துள்ளனர்.
கட்சி மாற்றம்
மேலும் பல உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். இவர்கள் கட்சிமாற்றம் தொடர்பில் ஏற்கனவே தலைவர்களுடன் கலந்துரையாடலை முடித்துவிட்டதாகவும், தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பின்னர் உரிய முடிவை அறிவிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூட்டணியில் 17 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூன்று தடவைகளில் இணையவுள்ளதாக மற்றுமொரு அரசியல் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
