பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல பிரேரணை: விசேட கூட்டத்திற்கு தயாராகும் சஜித் தரப்பு
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராயவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான கட்சியின் கூட்டம் இன்று(08.01.2023) இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளதாகவும், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என தீர்மானிப்போம் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச பயங்கரவாத சட்ட மூலம்
“இன்று முக்கியமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கலந்துரையாடவுள்ளோம்.
மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்தும் கட்சியின் கூட்டத்தில் ஆராயப்படும்.
இந்நிலையில், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் அவசியம். எனினும் உத்தேச பயங்கரவாத சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட எந்த ஆதரவையும் அளிக்கப்போவதில்லை” திஸ்ஸ அத்தநாயக்கஎன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |