திருகோணமலையில் அம்பியூலன்ஸ் முச்சக்கர வண்டிச்சேவை ஆரம்பம்
திருகோணமலை -உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முச்சக்கரவண்டியில் இலவச அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (29) திருகோணமலை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்தியர் சையொழிபவனின் தலைமையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இச் சேவையானது ஈகை தனியார் தொண்டு நிறுவனத்தின் ஊடாக உப்புவெளி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இச்சேவையினை முன்னெடுப்பதாக வைத்தியர் சையொழிபவன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட முச்சக்கரவண்டி மூலம் சேவையானது பிரதேசத்தில் நிலவும் அவசர அம்பியூலன்ஸ் சேவையினை நிவர்த்தி செய்வதற்காகவும், கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கும் தொற்றினால் மரணிக்கும் உடல்களைக் கொண்டு செல்வதற்குமான சேவையை முன்னெடுக்கும் என இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் எமது வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலையில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையினை தாமாக முன்வந்து இலவசமாகச் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்த ஈகை தனியார் தொண்டு நிறுவனத்திற்கு இதன்போது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இவ் ஆரம்பக் கட்ட நிகழ்வில் உப்புவெளி வைத்திய அதிகாரி வைத்தியர் சையொழிபவன் மற்றும் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட ஈகை தனியார் தொன்று நிறுவனத்தின் அமைப்பாளர் கருமேகம் நிசாந்தன், திட்டமிடல் அதிகாரி யோகநாதன் கரிதரன் மற்றும் ஈகை தனியார் தொன்று நிறுவனத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
