தொற்று நீக்கும் செயற்பாட்டில் தன்னை அர்ப்பணித்துள்ள நோயாளர்காவுவண்டி சாரதி
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் நோயாளர்காவுவண்டி சாரதியொருவர் தன்னுடைய கடமைக்கு மேலதிகமாக தொற்று நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்காவுவண்டி சாரதியாகக் கடமையாற்றி வரும் ஏ.ஜீ.எல்.சமிந்த, நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் - 19 தொற்றினால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமது பிரதேசத்தில் பொது மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்குச் சென்று தொற்று நீக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
நோயாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் இரவு பகலாக தன்னுடைய கடமையைச் செய்துவிட்டு தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டு மற்றவர்களும் தொற்று ஏற்படாத விதத்தில், தொற்று நீக்கம் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்குடன் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எரங்க குணசேகரவின் ஆலோசனையின் பேரில் தன்னுடைய சொந்த பணத்தில் குளோரினை பெற்று தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.








பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
