பிரித்தானியாவில் இருந்து புங்குடுத்தீவு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டி (photos)
புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினூடாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி வாங்குவதற்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியராக பணியாற்றிய மறைந்த ஐயாத்துரை சிவசாமியின் நினைவாக, அவரது மகன் பிரேமானந்தன் சிவசாமி இந்த நோயாளர் காவுவண்டியை வாங்குவதற்கான பணத்தை வழங்கியுள்ளதாக புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் தெரிவித்துள்ளது.
சூழலியல் மேம்பாட்டு அமைவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, சோம சச்சிதானந்தன் (Canada), கருணாகரன் நாவலன், கருணாகரன் குணாளன் ஆகியோரின் பெரு முயற்சியினால் புங்குதீவு நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) ஊடாக இத்திட்டம் கைகூடியுள்ளது.
விரைவில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டு பாவனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர் காவுவண்டி வழங்கி வைப்பு
அத்துடன் பிரேமானந்தன் சிவசாமி, அவரது குடும்பத்தினருக்கு புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








