இலங்கைக்கு எதிராக களமிறங்கியுள்ள கொழும்பில் உள்ள இரு முக்கிய நாடுகளின் தூதுவர்கள்!
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் இலங்கை தொடர்பான கோர் குழுவில் இடம்பெற்று முக்கிய நாடுகளின் தூதுவர்கள் இருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் கடந்த 2ம் திகதி தென் கொரியாவின் தூதர் வூன்ஜின் ஜியோங் மற்றும் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கக்கூடிய நாடுகளில் தென் கொரியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாமுடன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
கனடாவும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் கோர் குழுவில் உறுப்பு நாடாக உள்ளதுடன், பங்களாதேஷும் இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கிறது.
இவ்வாறான பின்னணியில் பங்களாதேஷூம், தென்கொரியாவும் இம்முறை மனித உரிமை பேரவையின் அமர்வில் வாக்களிக்கலாம் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
