நியூயோர்க்கில் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜூலி சங்
நியூயோர்க்கின் ஸ்டேட்டன் தீவில் உள்ள (Staten Island) புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து உரையாடியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chunk) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினேன்.
பரஸ்பர புரிதல்
இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் குறித்து இதன்போது புலம்பெயர் இலங்கையர்களின் கருத்துக்களை கேட்டறிந்துக்கொண்டேன்.
இந்த சந்திப்பு, பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
மேலும், இலங்கையின் முன்னாள் உடற்கட்டமைப்பு செம்பியன் உட்பட, கலாசாரங்களை ஒன்றிணைக்கும் சிறு வணிக உரிமையாளர்களை சந்திக்க, ஸ்டேட்டன் தீவில் இலங்கையர்கள் வசிக்கும் வழியாகவும் நான் நடந்து சென்றேன்.
Fantastic walk through Staten Island's Sri Lankan neighborhood to meet small business owners bridging our cultures together, including a former SL bodybuilding champion! Thanks for the warm hospitality delicious roti & lunumiris. pic.twitter.com/13BXodmBJ3
— Ambassador Julie Chung (@USAmbSL) June 9, 2024
இதன்போது, சுவையான ரொட்டி மற்றும் லூனுமிரிஸ் ஆகிய உணவுகளுடன் அருமையான விருந்தோம்பலை பெற்றேன். அதற்கு எனது நன்றிகள்.
அது மாத்திரமன்றி, ஸ்டேட்டன் தீவில் உள்ள இலங்கை கலை மற்றும் கலாசார அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டேன்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |