ஒரு ஓடுபாதையில் இரு விமானங்கள் : மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
மும்பை விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து ஒரு விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், மற்றுமொரு விமானம் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானம் தரையிறங்கியது.
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்களும் சிறிது இடைவெளியில் இயங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஊழியர் தற்காலிக பணிநீக்கம்
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்ததை தொடர்ந்தே ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கியதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
@tamilwinnews மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள் இயக்கப்பட்டதால் பதற்றம்..! ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரையிறங்கியதால் அதிர்ச்சி. இச்சம்பவத்தில் தொழில்நுட்ப பணியாளர் ஒருவரை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. விரிவான விசாரணைக்கு உத்தரவு #Lankasri #Tamilwin #Flight ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இதேபோல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல்படியே, ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்டதாக, ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது பணியில் இருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை,சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri