சிறப்பாக இடம்பெற்ற அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் விளையாட்டு போட்டி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி பாடசாலை அதிபர் மகாதேவன் மகாகேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேய வாத்திய இசை முழங்க வரவேற்கப்பட்டு தேசிய கொடி, பாடசாலை கொடி, கம்பன் பாரதி வள்ளுவன் இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஒலிபிக் தீபம் ஏற்றப்பட்டு சத்திய பிரமாணம் இடம்பெற்றது.
விளையாட்டு போட்டி
அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டியை சாம்பிர்தாயாய பூர்வமாக நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கல்வி வலய பொது முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், நாகராசா காண்டீபன் ஆரம்பித்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இல்லங்களின் அணி நடை இடம்பெற்றது.தொடர்ந்து இல்ல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கம், கேடயம், என்பவற்றை வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினரும், வடமராட்சி கல்வி வலய பொது முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், நாகராசா காண்டீபன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அம்பன் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரவிச்சந்திரன் வில்சன் ஜெரின், கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட நல்லத்தம்பி பத்மநாதன் வழங்கினர்.
கம்பன், வள்ளுவன் பாரதி ஆகிய கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சிவப்பு நிறமுடைய கம்பன் இல்லம் முதலாம் இடத்தினையும், பச்சை நிறம்கொண்ட வள்ளுவன், மஞ்சள் நிறம் கொண்ட பாரதி இல்லம் ஆகியன இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
இந்த விளையாட்டு போட்டியில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பாடசாலையின் முன்னாள் அதிபர்களான v. பரமேஸ்வரன், சோ. வக்கீசன், கண்ணதாசன், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan