உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபர் (Photos)
யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18.01.2023) காலை10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம் (16.01.2023) அமைச்சரவை வழங்கியது.
இவருக்கான நியனக் கடிதங்கள் நேற்று (17.01.2023) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவால் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சர்வமதத் தலைவர்களிடம் ஆசிபெற்ற பின்னர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நான் யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமையேற்றுள்ளேன். நான் செய்ய எதிர்பார்க்கின்றேன் என்ற சொல்லைவிட செயல்திறன் நல்லம். அதனை செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் நிக்லஸ்ப்பிள்ளை மோகனதாஸ் மற்றும் மாவட்ட திணைக்கள பதவிநிலை உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அம்பலவாணர் சிவபாலசுந்தரன்
இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்து பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவை தொடங்கிய ஜீ தமிழ்.. அர்ச்சனா தொகுப்பாளினி, நடுவர்கள் யார் யார்? Cineulagam
