நாடாளுமன்றில் அமளிதுமளி - அமர்வுகள் ஒத்தி வைப்பு
நாடாளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டதனை அடுத்து அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானது போது இவ்வாறு குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் எழுந்த குழப்ப நிலைமையே இந்த பதற்ற நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் காரணமாக அவை அமர்வுகளை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri