இதுதான் நம் கனவு! தாயக விளையாட்டு வீரர்களை பாராட்டும் தமிழ் புலம்பெயர் தொழிலதிபர்(Video)
அல்வாய் விளையாட்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்வு சந்தை மைக்கல் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வு கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தி.வரதராசன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்த விழாவில் தமிழ் புலம்பெயர் தொழிலதிபரும், லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி
இதன்போது உதைப்பந்தாட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறு விறுப்பாக இடம்பெற்றது. முதல் பாதியாட்டம் 01:00 என்ற கோல் கணக்கில் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் பாதியாட்டத்தில் சென் சேவியர் அணியின் முன்கள வீரர் சிறப்பான கோல் ஒன்றை போட்டு போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து விறுவிறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருந்த போட்டி முடிவடைய சில நிமிடம் இருக்கும் போது டயமன்ஸ் அணியின் முன்கள வீரர் பிரசன்னா கோலொன்றை போட்டு தமது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் 02:01 என்ற கோல் கணக்கில் சற்கோட்டை சென்சேவியர் அணியை வீழ்த்தி வதிரி டயமன்ஸ் அணி சம்பியனாகியது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக டயமன்ஸ் அணியின் இளம் வீரர் பிரசன்னா தெரிவுசெய்யப்பட்டார்.