முகமது அஸ்மான் ஷெரிப்தீன் புகைப்படத்தால் சர்ச்சை - நீதிமன்றம் சென்ற குடும்பத்தினர்
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்லை சஞ்சீவவின் கொலை வழக்கில் முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரை தவறாக பகிரங்கமாக குறிப்பிட்டதன் மூலம் அவரது குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முகமது அஸ்மான் ஷெரிப்தீனின் சகோதரர் தாக்கல் செய்த இந்த மனுவை வழக்கறிஞர் நுவான் ஜெயவர்தன நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த மனு தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வழக்கறிஞர் தசுன் பெரேரா, தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் முகமது அஸ்மான் ஷெரிப்தீனின் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய புகைப்படம்
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபரின் முகம் சரியாக அடையாளம் காணப்படுவதற்கு முன்பு வெளியிட்ட சந்தேக நபரின் பெயரும் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் ஒரே நபர் அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்தார்.
தனது கட்சிக்காரரின் சகோதரரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சந்தேக நபராக வெளியிடப்பட்டமை குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள என வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, பெயரிடப்பட்ட சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட மற்றும் சமூக சிக்கல்களை எதிர்கொண்டனர், அதன் பின்னர், பொலிஸார் அவரது வீட்டிற்கு வந்து அவரது மோட்டார் சைக்கிளைக் கூட பறிமுதல் செய்துள்ளனர்.
மனு தாக்கதல்
மேலும் இது தொடர்பாக உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததால், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, தொடர்புடைய கோரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மகரகம பகுதியை சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
