புதுக்கடை நீதிமன்ற விவகாரம்! அமைக்கப்படவுள்ள சோதனைச் சாவடி
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக சோதனைச் சாவடியொன்றை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித் லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரின் பங்கேற்புடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நீதவான் தனுஜா லக்மாலி பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பிரதான நீதவான் நீதிமன்றம்
பிரதான நீதவான் நீதிமன்றத்திற்குச் செல்லும் பிரதான வாயிலுக்கு அருகில் குறித்த புதிய சோதனைச் சாவடியை நிறுவுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றினுள் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நீதிமன்ற கட்டமைப்புக்குள் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
