வத்தளை புனித அந்தோனியார் தேசிய கல்லூரியின் தமிழ் பிரிவு பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
வத்தளை புனித அந்தோனியார் தேசிய கல்லூரியின் 2021ஆம் ஆண்டுக்கான தமிழ் பிரிவு பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் (TOBA RE UNION) நாளைய தினம் (3 ஆம் திகதி சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
குறித்த ஒன்றுகூடலானது நாளை மாலை ஆறு மணிக்கு வத்தளை VPF மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் வணக்கத்திற்குரிய Rev.Fr.I.Mal.W Fernando(அதிபர்),.P.முரளிதரன்(தமிழ் பிரிவு அதிபர்)மற்றும் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், அனுசரணையாளர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
லங்காசிறி ஊடக அனுசரணையில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலில் பாடசாலையில் கல்வி கற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும், விருந்து உபசாரம் மற்றும் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இப்பாடசாலையின் தமிழ் பிரிவு மாணவர்களின் வகுப்பறை மூன்று மாடிக்கட்டடத்தில் முதல் மாடி கட்டடமானது பழைய மாணவர்கள் முயற்சியினாலேயே கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு மாடிக்கட்டடங்களை கட்டுவதற்கான அடித்தளமாக இவ்வொன்று கூடல் அமையுமென்றும் , இந் நிகழ்வில் பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் பிரிவு பழைய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri