வெளிநாட்டில் மறைந்திருக்கும் குற்றக்கும்பல் தலைவர் - இலங்கையில் சிக்கிய ஆயுதக்கும்பல்
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மசிறி லியனகே "எல்டோ தர்மே" என்பவரின் ஆயுத குழுவைச் சேர்ந்த மூன்று பேர் கல்கிஸ்ஸ பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், 25 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 15 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்
கடந்த காலங்களில் மொரட்டுவ, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் "எல்டோ தர்மே" இன் எதிரித் தரப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் அனைத்தும், அவரது நெருங்கிய சகாக்களில் ஒருவரான "துமிந்து" என்பவரின் வழிகாட்டலிலேயே இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஜனவரி 26 ஆம் திகதி மொரட்டுவ பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட உலை இக்குழுவினரே நடத்தியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரத்மலானை மற்றும் அங்குலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.